» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடத்தப்பட்ட 2 அடி உயர பழங்கால அம்மன் சிலை மீட்பு: தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 15, மே 2025 8:25:00 AM (IST)
தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 2 அடி உயர பழங்கால அம்மன் சிலையை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சிலை கடத்தல் கும்பல் பழங்கால சிலையை மற்றொரு கும்பலுக்கு விற்பனை செய்ய இருப்பதாக, நெல்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலையில் தூத்துக்குடிக்கு சென்றனர்.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, சுமார் 2 அடி உயர பழங்கால அம்மன் சிலை இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 4 பேரையும் நெல்லையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் ஒருவர் தி.மு.க. பிரமுகர் என்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு பழங்கால சிலை எப்படி கிடைத்தது? ஏதேனும் கோவிலில் இருந்து கடத்தி வந்தனரா?, இதற்கு வேறு யாரேனும் உடந்தையா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும், இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதற்காக சிலையை ஆய்வக பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்ப உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தூத்துக்குடியில் கடத்தப்பட்ட பழங்கால அம்மன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










