» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)

திருவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் கருகும் நிலையில் இருக்கும் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர், சு. நம்பிராஜன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "திருவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் ஏரல், கெற்கை, லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, பேய்குளம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், அத்திரபட்டி, பட்டி. ஆகிய பகுதிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் தண்ணீரன்றி கருகும் நிலையில் இருந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் கவலையோடு இருந்து வருகிறார்கள். பாபநாசம் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தண்ணீர் திறந்து விடமால் இருந்து வருகிறார்கள். விவசாயிகள் பொதுபணித்துறை அதிகாரியிடம் மனுக்கொடுத்தாலும் திருவைகுண்டம் வடக்கால் வாய்க்காலில் பாலங்கள் வாய்க்காலில் கரை அமைத்தால் வேலைகள் நடந்து வருகிறது என்று காரணம் காட்டி தண்ணீர் திறந்து விடமால் இருந்து வருகிறார்கள்.
இந்த வேலைகளும் மெதுவாக நடந்து வருகிறது, ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிடு செய்து வடகால் பாசனத்தில் கருகும் நிலையில் இருக்கும் வழைக்களை காப்பாற்ற வடககால் பாசனத்தில் நடக்கின்ற வேலை உடனடியாக வேலைகளை மிக விரைவாக முடித்து 'பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










