» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திங்கள் 5, மே 2025 5:48:34 PM (IST)

தூத்துக்குடி அருகே பட்டா பெயர் மாற்றுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டாராம். இதனால், பிரபாகரன் தனது மனைவி பெயரில் பண்டாரம் பட்டியிலுள்ள  4.5 சென்ட் நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக, தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் செயல்பட்டு வரும் சங்கரப்பேரி கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தாா். 

அந்த விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாம். தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (42), என்பவர் சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர் பட்டா மாறுதலுக்கு பிரபாகரனிடம் ரூ.3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து டிஎஸ்பி பீட்டர் பால் அறிவுறுத்தலின் பேரில் விஏஓ அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஓ.ஓ., கணேச மூர்த்தியிடம் பிரபாகரன் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

Babuமே 7, 2025 - 11:33:51 PM | Posted IP 162.1*****

நான் வாரிசு சான்றிதழ் எடுக்க ரூபாய் 1500 செலவு பண்ணி இருக்கேன் செலவு செய்து எடுத்தேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory