» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வெள்ளி 2, மே 2025 9:16:01 AM (IST)
மெஞ்ஞானபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் உடன்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வகுமார் (47). விவசாயி. இவரது மனைவி வளர்மதி இவர்களுக்கு ஏழுவரைமுக்கி பகுதியில் தோட்டம் உள்ளது அங்கு அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் செல்வகுமார் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய பணியை பார்த்து வருகின்றனர்.
அவ்வப்போது அவர் மெஞ்ஞானபுரம் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் மெஞ்ஞானபுரம் வீட்டிற்கு செல்வகுமார் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது பீரோரும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் கட்டிலின் மெத்தைக்கு அடியில் வைத்திருந்து இருந்த 2½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு மர்மநபர்கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










