» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகர் கடற்கரை பூங்காவில் கரை ஒதுங்கிய கடல்பாசி : சுகாதாரக்கேடு அபாயம்!

திங்கள் 28, ஏப்ரல் 2025 8:55:26 AM (IST)



தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஒதுங்கி உள்ள கடல்பாசிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி மாநகர மக்களின் பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாக முத்துநகர் கடற்கரை விளங்கி வருகிறது. இந்த கடற்கரை பூங்காவில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த கடற்கரை பூங்காவுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள கடற்கரை ஆழம் குறைந்த கடற்கரையாக இருப்பதால் மக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர். அதே போன்று படகு சவாரியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடலில் உள்ள பாசிகள் அழுகி கரை ஒதுங்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடல்பாசிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் அதிக அளவில் ஒதுங்கி உள்ளன. இந்த கடல் பாசிகள் அழுகிய நிலையில் கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. 

இதனால் சுகாதாரக்கேடு அபாயம் ஏற்பட்டு இருப்பதால், மக்கள் அந்த பகுதியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடற்கரையில் மக்கள் உற்சாகமாக விளையாட முடியாமல் சிரமப்பட்டு உள்ளனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் கடற்கரை பூங்காவில் ஒதுங்கி உள்ள கடல்பாசிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மக்கள் கருத்து

அதானேApr 28, 2025 - 10:12:34 PM | Posted IP 162.1*****

மீனவர்கள் எல்லாம் சுத்தப்படுத்தமாட்டாங்க , கடல் வளத்தை ஆட்டைய போட மட்டும் தெரியும்.

MuthuApr 28, 2025 - 09:45:14 AM | Posted IP 162.1*****

கடல்பாசிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory