» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:33:51 PM (IST)

உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவனிடம் மாற்றுத் திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி பதவிகளில் அதிகாரம் வழங்கும் சட்ட முன் வடிவை அறிமுகம் செய்து அறிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு தாங்கள் நன்றி தெரிவித்ததை பதிவு செய்யுங்கள் என்று கூறி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மாற்றுத்திறனாளிகள் மோசஸ் அண்ணா ராஜன், செயலாளர் ஷெர்லி, சங்கத்தின் நிர்வாகிகள் பத்மநாதன், பரமசிவம், வெற்றி, ராஜா, குருநாதன் மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் கூறுகையில் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளியாகிய எங்களையும் உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் அமர வைத்து அழகு பார்க்கும் வகையில் சட்டத்தை இயற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கும் எங்கள் மாவட்ட அமைச்சர் கீதாஜீவனுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி விசுவாசமாக இருந்து பணியாற்றுவது மட்டுமின்றி வரும் காலங்களில் திமுக வின் முன்னெடுப்பிற்கு முழுமையாக உழைப்போம் என்று கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










