» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:28:22 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக தருவைகுளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளின் கொடி கம்பங்களையும் அகற்றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து கொடிக் கம்பங்களையும் 10.04.2025 தேதிக்குள் தங்கள் சொந்த செலவில், எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் உள்ள அரசியல் கட்சி மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










