» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)

நாலாட்டின்புத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள கல்லூரணி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் செண்பகராஜ் (60). விவசாயி. இவர் வீட்டில் ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் செண்பகராஜ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது திடீரென ஆடுகள் மற்றும் கோழிகள் அலறும் சத்தம் கேட்டு வந்து வெளியே வந்து பார்த்துள்ளார். 

அப்போது 3 மர்ம நபர்கள் 2 ஆடுகள் மற்றும் கோழிகள் திருடி கொண்டு ஓடியுள்ளனர். சிறிது தூரம் அவர்களை செண்பகராஜ் துரத்தி சென்றுள்ளார். ஆனால், அந்த 3பேரும் இருளில் வேகமாக ஓடி தப்பி ெசன்று விட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து ஆடு, கோழிகளை திருடி சென்ற 3மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory