» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகளுக்கு ரூ.184.58 கோடி பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது : ஆட்சியர் தகவல்!

வியாழன் 20, பிப்ரவரி 2025 3:39:55 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (20.02.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 28.33 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. 

தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 4.38 மெ.டன், சோளம் 1.02 மெ.டன், உளுந்து 5.99 மெ.டன்,கம்பு 2.74 மெ.டன் பாசிப்பயறு0.1 மெ.டன்,நிலக்கடலை 2.965 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 3680 மெ.டன் யூரியா, 2400 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1460 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 700 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன. 

நடப்பு பிப்ரவரி, 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 1340 மெ.டன் யூரியா, 2400 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 140 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 850 மெ.டன் யூரியா 50 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 1150 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலம் 15.02.2025 வரை ரூ.250.35 கோடிக்கு 21846 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16028 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.184.58 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory