» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபோதையில் தகராறு: அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
வியாழன் 20, பிப்ரவரி 2025 12:48:02 PM (IST)
தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் குமாரசாமி (48), கூலி தொழிலாளி. முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் தனுசுராஜ் மகன் அருண்பாண்டி (32), மெக்கானிக். இவர்கள் இருவரும் நேற்று இரவு அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டி, குமாரசாமியை அரிவாளால் வெட்டினாராம்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)










