» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

வியாழன் 20, பிப்ரவரி 2025 8:41:48 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-7-2009 அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

ராஜகோபுரத்தில் 9-வது நிலையில் கட்டப்பொம்மன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய மணியையும் பழமை மாறாமல் புதுப்பித்து நிறுவி உள்ளனர். கும்பாபிஷேக தினத்தன்று ராஜகோபுர மணி மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜகோபுரத்தைச் சுற்றிலும் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு, அவற்றில் நின்று தொழிலாளர்கள் பழங்கால சிற்பங்களுக்கு வர்ணம் பூசுகின்றனர். சேதமடைந்த சிற்பங்களையும் புதுப்பிக்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory