» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!

வியாழன் 20, பிப்ரவரி 2025 8:30:37 AM (IST)

தூத்துக்குடியில் நீக்கப்பட்ட கல்லூரி மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி 2 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் பேச்சுவார்த்தை காரணமாக தற்காலிகாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை கண்டித்து கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு கல்லூரி நிர்வாகம் மாணவர் சங்க நிர்வாகி நேசமணியை ஒழுங்கு நடவடிக்கை விசாரணை கமிஷன் என்ற பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகளை புனைந்து கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளது. இதற்கு எதிராக 17.02.2025 அன்று காலை 10.30 மணிக்கு துவங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. 

இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நேசமணி, இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்ரீநாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் சந்தன செல்வம், ஆகியோர் இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் இருந்தனர். 

இந்நிலையில் நேற்று மாலை வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு வார காலத்திற்கு மட்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் எல் முருகன் தோழர்களுக்கு குளிர் பானம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, தூத்துக்குடி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து, கட்சியின் மூத்த தோழர்கள் சீனிவாசன், கண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சைலேஷ் அருள்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார், மாடசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory