» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை ஷட்டருக்குள் சிக்கிய புறா பத்திரமாக மீட்பு

வெள்ளி 7, பிப்ரவரி 2025 10:42:56 AM (IST)



தூத்துக்குடியில் ஜவுளிக்கடை  ஷட்டருக்குள் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர். 

தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள ஜவுளி கடை மாடிகளில் ஏராளமான புறாக்கள் வசித்து வருகின்றன. இதில் ஒரு புறா இன்று காலை ஜவுளிக் கடையில் கதவு ஷட்டர்க்குள் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்து கடை ஊழியர்கள் புறாவை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் புறாவை வெளியே எடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு துறை அதிகாரி இருதயராஜ்  தலைமைலான தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஷட்டருக்குள் சிக்கிக்கொண்ட புறாவை கம்பி மூலம் எடுக்க முயன்றனர். ஆனால் புறா வராததால் ஷட்டரில் உள்ள பலகையை ரம்பத்தான் அறுத்து பலகையை உடைத்து புறாவை உயிருடன் மீட்டனர். அதன் பின்பு புறாவுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் முதல் உதவி சிகிச்சை மற்றும் உணவு அளித்து அதனை பறக்க விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


மக்கள் கருத்து

SRINIVASANFeb 7, 2025 - 10:55:32 AM | Posted IP 162.1*****

welldone

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory