» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் வெட்டிக்கொலை : 2 இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது - பரபரப்பு தகவல்!!!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 10:25:39 AM (IST)
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளஞ்சிறார்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அமுதுண்ணான்குடி, அண்ணாநகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன் மகன் சந்துரு (20). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் சுபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பத் தகராறில் சுபா அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.பின்னர் அவர், மாணிக்கவாசகபுரத்தைச் சேர்ந்த மரிய ஜோசப் மகன் கிங்ஸ்டன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த விபரம் சந்துருக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிங்ஸ்டன் அவரது நண்பர்ளுடன் சேர்ந்து நேற்று இரவு சந்துரு வேலை முடிந்து வரும்போது அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் (பொ) நாககுமாரி வழக்குப் பதிந்து கிங்ஸ்டன் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மகராஜன் (20), கருப்பசாமி மகன் லங்கதுரை (18), மற்றும் 2 இளஞ்சிறார் என 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2பேர் தப்பி ஓடு முயற்சித்த போது கீழே விழுந்ததில் கைகளில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு காவல் வைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










