» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எங்களை என்கவுண்டரில் சுட்டுக் வீழ்த்தி விடுங்கள் : தமிழ்ப் பேரரசு கட்சியினர் பரபரப்பு மனு!

வெள்ளி 7, பிப்ரவரி 2025 10:21:53 AM (IST)



"மனு கொடுத்த எங்களை என்கவுண்டரில் சுட்டுக் வீழ்த்தி விடுங்கள்" என கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் தமிழ்ப் பேரரசு கட்சியினர் மனு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தினசரி சந்தை விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், மேலும் சட்ட விரோதமாக கிணறுகளை மூடி உள்ளதாகவும், மேலும் நீர்வரத்து ஓடை மூடப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இந்த தினசரி சந்தை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், , சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் திட்டங்குளம் தனியார் சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 2023ல் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் திட்டங்குளம் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அந்த தனியார் தினசரி சந்தையில் நிரந்தர கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் துணை போவதாகவும்,  சட்ட விதிமீறலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு துணை போகும் நிலை இருப்பதால் கோரிக்கை மனு அளித்த தங்களை என்கவுண்டரில் காவல்துறை சுட்டு வீழ்த்த உத்தரவு விட வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சியினர் அதன் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சரவணன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory