» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேவைக் குறைபாடு: ரிசார்ட் நிறுவனம் ரூ.4.80 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 8:19:16 AM (IST)
சேவைக் குறைபாடு காரணமாக ரிசார்ட் நிறுவனம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது
தூத்துக்குடி தனசேகரன் நகரைச்; சார்ந்த கபிலன் ரத்தின சபாபதி என்பவர் சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்திடம்; 3.2 லட்சம் செலுத்தி கொடைக்கானல் ரிசார்ட்டில் தங்குவதற்காக உறுப்பினராக சேர்ந்துள்ளார். இதில் 2 ஆண்டுகளுக்கு பராமரிப்பு கட்டணம் இல்லாமல் தங்கலாம் என அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் புகார்தாரர் அங்கு தங்காமலேயே முதலாண்டுக்கான பராமரிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
உடனே மனுதாரர் அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு இதை நாங்கள் சரி செய்து விடுகிறோம். நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை என வாய் மொழியாக கூறியுள்ளனர். ஆனால் சரி செய்து கொடுக்கவில்லை. இதனால் தான் செலுத்திய உறுப்பினர் கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அந்த ரிசார்ட் நிறுவனம் பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறி விட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புகார்தாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஏற்கனவே செலுத்திய தொகையான 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,50,000;, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 மூ வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)










