» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 8:08:05 AM (IST)
எட்டையாபுரம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகில் உள்ள இளம்புவனம் கிராமத்தைச்் சேர்ந்தவர் செல்லையா மகன் சுந்தர்ராஜ் (29), பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கு இவரது பெற்றோர்கள் பல இடங்களில் பெண் பார்த்தும், சரியான வரன் அமையவில்லையாம்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










