» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆபத்தான மின் கம்பம்: மேயர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வியாழன் 6, பிப்ரவரி 2025 9:40:56 PM (IST)

தூத்துக்குடியில் மிகவும் சரிந்த நிலையில் ஆபத்தான சூழலில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த "தி பஜார்" மாத இதழ் ஆசிரியர் கே. பொன் பலவேச ராஜ் மாநகராட்சி மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி எட்டயபுரம் சாலை ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தென்புறம் உள்ள கமாக் மேல்நிலைப்பள்ளி ரோட்டில் சாலையில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சரிந்த நிலையில் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது.
வெகு நாட்களாக சாலை நடுவில் அமைந்துள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓரமாக வைக்க புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் மின்சார வாரியம் இன்று வரை மின்கம்பத்தை சரி செய்ய முன் வரவில்லை. புதியதாக சாலை போடும் போதும் முறையிட்டும் மின்கம்பத்தை அகற்றாமல் மின்கம்பத்தை சுற்றி சாலை அமைத்து சென்றுள்ளனர்.
இதனால் லாரி, பஸ், டிப்பர் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் நடுவில் மின்கம்பம் இருப்பதினால் திரும்ப முடியாமல் வந்த வழியே திரும்பி செல்கின்றன. தற்போது இந்த மின்கம்பம் மேலும் சரிந்து கொண்டே வருவதனால் எனது வீட்டின் அருகாமையில் இருப்பதாலும் மின்கம்பிகள் எனது வீட்டின் கூரையின் மீது செல்வதாலும் இந்த மின்கம்பம் சரிந்து விழுந்தால் முதலில் பாதிக்கப்படுவது நானாக இருப்பேன்.
மேலும் பள்ளி குழந்தைகள் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருவதால் குழந்தைகள் ஏதும் பாதிப்படையாமல் இருக்க மின்கம்பத்தை உடனே மாற்றி சாலையின் நடுவில் இருந்து ஓரமாக வைக்க வேண்டும் என்று கமாக் பள்ளி தெரு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2024 டிசம்பர் மாதம் நான் இதற்கான புகாரினை மின்வாரியத்திற்கு மீண்டும் தெரிவித்தேன். அப்போது மின்சார வாரியத்தில் இருந்து டிசம்பர் 31ம் தேதி (2024) மின்கம்பத்தை சாலையின் நடுவில் இருந்து அகற்றி ஓரமாக வைத்து தருவதாக கடிதம் மூலம் உறுதி அளித்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு 31 டிசம்பர் முடிந்து இன்றுடன் 37 நாட்கள் ஆகியும் இதுவரை மின்கம்பம் சாலையின் நடுவில் இருந்து அகற்றப்படாமல் அதே இடத்தில் உள்ளது. மின்கம்பம் மிகவும் சரிந்த நிலையில் இருப்பதினால் மின்கம்பிகள் லூசாகி தொய்வடைந்து காற்றில் ஒன்றுடன் ஒன்று உரசி ஆபத்தாகும் சூழலில் உள்ளது.
அவ்வாறு உராய்ந்தால் மின்சாரம் தடைபடும் அல்லது ஆபத்து ஏற்படும். மேலும் எனது வீட்டில்அல்லது எனது தெருவில் உள்ள வீட்டில் உள்ள மின் கம்பி இணைப்பு அறுந்தால் ஏற்படும் மின்தடையை சரி செய்வது என்றால் இந்த மின்கம்பத்தில் ஏறி சரி செய்யாத முடியாத சூழ்நிலையிலும் உள்ளது. எனவே மாநகராட்சி மேயர் அவர்கள் இதனை முறையிட்டு உடனே சரி செய்து மின்சார ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
என்ன இதுFeb 7, 2025 - 07:41:01 AM | Posted IP 162.1*****
ஆபத்து எனத் தெரிந்ததும் மின்சார துட்டு ஊழியர்களுக்கு மூளை இல்லையா? எல்லாத்தையும் அடுத்தவங்க தான் சரிபண்ணணுமா? சீக்கிரமா சரிபண்ணுங்க
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)











மனிதன்Feb 7, 2025 - 09:50:40 AM | Posted IP 172.7*****