» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறை மோசடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வியாழன் 6, பிப்ரவரி 2025 5:46:35 PM (IST)

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் பண மோசடி தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. 

தற்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு மத்திய மாநில அரசு உதவித்தொகை ஆணைய (Scholarship Fraud) பிரிவிலிருந்து பேசுவதாக கூறி உங்கள் குழந்தைகளின் பெயர், அவர்கள் பள்ளி கல்லூரிகளில் எடுத்த மதிப்பெண்களின் விவரங்கள் போன்றவற்றை கூறி அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு உதவித்தொகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த உதவி தொகையை பெறுவதற்கு நாங்கள் ஒரு QR code மற்றும் link அனுப்புகிறோம் என்றும், அந்த  QR code ஸ்கேன் செய்வதன் மூலம் நீங்கள் உதவி தொகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தொடர்பு கொள்கின்றனர்.  

இவற்றை நம்பி பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அந்த QR code ஐ ஸ்கேன் செய்வதினால் அவர்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மோசடி செய்யப்படும். எனவே உதவி தொகைக்கு விண்ணப்பித்து இருந்தாலும், விண்ணப்பிக்காத   நிலையிலும் இவ்வாறு தொடர்பு கொண்டால், தங்களைப் பற்றி எந்தவிதமான சுயவிவர பதிவுகளை அளிக்க வேண்டாம் எனவும், அவர்கள் அனுப்பும் QR code ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும், அவ்வாறு உதவி தொகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் நேரடியாக பள்ளிகள் மூலமாக பெற்று கொள்ளவதாக கூற வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இவ்வாறு அனுப்பப்படும் QR code ஸ்கேன் செய்து தங்களது பணத்தை இழந்து இருந்தால் தங்களது பணபரிவர்த்தனைகளை உள்ளீடு செய்து உடனடியாக cybercrime.gov.in அல்லது 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணிற்கு அழைத்து புகார் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory