» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சியுடன் தலா 7 ஊராட்சிகள் இணைப்பு!

வியாழன் 2, ஜனவரி 2025 10:41:24 AM (IST)

தூத்துக்குடிமாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சியுடன் தலா 7 ஊராட்களை இணைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 

நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சேலம், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு. கரூர், ஓசூர், மதுரை. திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஆவடி பெருநகர சென்னை மாநகராட்சி, கும்பகோணம், தஞ்சாவூர். தூத்துக்குடி மற்றும் சிவகாசி ஆகிய மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்தல் தொடர்பான உத்தேச முடிவு குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய 7 கிராம ஊராட்சிகளை இணைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

கோவில்பட்டி நகராட்சியுடன்

கோவில்பட்டி நகராட்சியுடன் இனாம்மணியாச்சி, மூப்பன்பட்டி, இலுப்பையூரணி. திட்டங்குளம். பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு மற்றும் நாலாட்டின்புதூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். இதன் மூலம், இம்மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதோடு சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். 

மேலும், இவ்வூராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புர பண்புகளையும் கொண்டுள்ளன. 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 72,563 ஆகும். எனவே, மேற்படி கோவில்பட்டி நகராட்சியுடன் இந்த 7 ஊராட்சிகளை, கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

MariselvamJan 5, 2025 - 05:33:12 PM | Posted IP 172.7*****

என் ஊரு மேலக்கரந்தை ஊராட்சி தூத்துக்குடி 65km கோவில்பட்டி 32km தூரம் உள்ளது அருப்புக்கோட்டை 26km உள்ளது அறுப்புகொட்டையை மாவட்டம் ஆக மாற்றி அதனை சுற்றி 30km வரை உள்ள கிராமங்களையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.

SankarJan 4, 2025 - 01:53:02 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள். வரியை மட்டும் கவனம் செலுத்தாமல் பணியாற்ற வேண்டும்

K.SANKARJan 4, 2025 - 01:41:47 PM | Posted IP 172.7*****

மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் வரி வசூலுக்கு மட்டுமல்லாமல் அடிப்படை தேவைகள் நல்ல முனையில் கிடைக்குமாறு இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

Sathya. RJan 4, 2025 - 06:26:41 AM | Posted IP 172.7*****

கோவில்பட்டி மாநகராட்சி நல்லதுதான் அதுபோல கோவில்பட்டி மாவட்டமாக அறிவித்தால் மிக நன்று எங்கள் ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தால்குடி அருகில் உள்ள தொ. நமச்சிவையபுரம் இது மாவட்டத்தின் எல்லையில் உள்ளதால் கிராம பஞ்சாயத்திற்கு varum சலுகைகள் முழுமையாக இந்த ஊர் மக்களுக்கு செல்வதில்லை அப்படியே சென்றாலும் ஒருசில அரசியல்வாதிகளும் துறைசர்ந்து இருப்பவர்களும் அதை மறைத்து உங்களுக்கு வராது என்று மாலுப்பிவிடுகிறார்கள் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சில ஆட்டு லோன் மாட்டு லோன் சிறு விடயம் கூட அடங்கும் எனவே கோவில்பட்டி மாவட்டமாக மாறினால் பந்தல்குடி வரை கோவில்பட்டி மாவட்டமாக ஆகலாம் என்று அறிந்தது ஆகையால் மாற்றம் என்பது மாறாது மாறினால் நல்லது நன்றி... பொதுநலன் கருதி.

சரவணக்குமார்Jan 4, 2025 - 05:55:00 AM | Posted IP 162.1*****

மென்மேலும் சிறந்த வளர்ச்சி திட்டங்களுக்கு வழிவகுத்து வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

மனோகரன்Jan 3, 2025 - 05:12:23 PM | Posted IP 172.7*****

ராஜிவ் நகர் 6 வது தெரு பாஸ்கர் வீடு பின்புறம் உள்ள தெரு 12 வருடமாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியில்லாத லவ் இருக்கிறது முதியவர்கள் மிக சிரம் படுகிறார்கள்.பக்கத்து தெருவெல்லாம் ரொடு வந்துவிட்டது இத்தெரு மட்டும் புறக்கணிக்க படுகிறது நகராட்சி கவனிக்குமா

SelvaJan 3, 2025 - 03:02:38 PM | Posted IP 172.7*****

Land praise Hiyaga Erugu Athan control Pannavandum

சண்முகம்Jan 3, 2025 - 12:46:45 PM | Posted IP 172.7*****

வரி வசூலாக்காக நகராட்சி மாநகராட்சி உடன் மோசடியாக கிராம வாழ் குடிமக்கள் கருத்த்தை கேட்காமல் கிராமங்களை இணைக்க கூடாது உண்மையான தொழில் மற்றும் குடிமக்கள் அரசு வருவாய்வளர்ச்சி இருப்பின் இணைக்க வேண்டும்.

பாலுJan 3, 2025 - 12:35:51 PM | Posted IP 172.7*****

சரி

RajnayakJan 3, 2025 - 12:17:12 AM | Posted IP 162.1*****

அப்படி என்றால் கோவில்பட்டி மாநகராட்சி ஆகிவிடும்!!

சுப்புராயலுJan 2, 2025 - 09:49:50 PM | Posted IP 162.1*****

Ok எங்கள்இனாம் மணியாச்சி ஊராட்சி பகுதி மக்கள் கோரிக்கை ரயில்வேய் சர்வீஸ் ரோடு கிடைத்தால் சரி

S, JOHNSON JAYAKUMARJan 2, 2025 - 07:31:06 PM | Posted IP 162.1*****

Super super

SubramanianJan 2, 2025 - 03:58:30 PM | Posted IP 162.1*****

https://youtube.com/shorts/ny7Gewn7Ou4?si=m78cmtluF3KvOdOL மேற்கண்ட வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப கோவில்பட்டி குடி மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளை கோயில் பட்டி நகராட்சி நிர்வாகம் செம்மையாக செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory