» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 3வது கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சனி 14, டிசம்பர் 2024 10:38:57 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் 3வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவியது. இந்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும். மேலும் இன்று (டிச.14) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் தொடர் மழை காரணமாக பழைய மாநகராட்சி அலுலவகம், வஉசி மார்க்கெட், சந்தை ரோடு அந்தோணியார் கோவில், ஜார்ஜ் ரோடு, சிவந்தாகுளம் பள்ளி, திருச்செந்தூர் ரோடு உட்பட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மேலும், ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, முத்தம்மாள் காலனி தொடர்ச்சி, ராம்நகர் பகுதிகளில் ஆங்காங்கே வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது. அதனை உடனடியாக மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினர். கீழ் தளத்தில் உள்ள நோயாளிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக முதல் மாடிக்கு மாற்றப்பட்டனர். அனைத்து உபகரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் அத்திமரப்பட்டி- காலாங்கரை சாலையில் உள்ள தரைமட்டபாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு உப்பாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு உப்பாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தெர்மல் நகர், கோவில்பிள்ளை விளை, முத்துநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











அப்ராணி சப்ராணிDec 15, 2024 - 09:40:46 AM | Posted IP 172.7*****