» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே 10ஆம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு!
திங்கள் 4, நவம்பர் 2024 12:08:25 PM (IST)

தூத்துக்குடி அருகே பட்டினமருதூர் மற்றும் தருவைக்குளத்தில் 10ம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு, மிக தொன்மையான சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதியும், தூத்துக்குடியை சார்ந்த சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 3ம் ஆண்டு வரலாறு மற்றும் தொல்லியல் பிரிவில் பயின்று வரும் பெ.ஜேன் பினகேஷ் சகிதம் 03.11.2024 அன்று பட்டினமருதூரின் தென்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வீரபாண்டிய விநாயகர் ஆலயம் அருகிலுள்ள பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது ஓர் மணல் கல் தூணில் இருபுறமும் தமிழ் - வட்ட எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளதை அந்த கோவிலின் வாசல் சுவற்றின் அருகில் கண்டெடுத்ததாகவும், அதன் எழுத்து வடிவங்களை ஒப்பீடு செய்து பார்த்த பொழுது அதில் சுமார் 8 – 10 நூற்றாண்டின் காலகட்டத்தினை சேர்ந்தது போன்ற எழுத்து வடிவங்கள் தென்படுவதாகவும், இந்த கல்தூணின் தன்மையானது ஏற்கனவே தான் ஆவணப்படுத்தியுள்ள அதே பகுதியின் இஸ்லாமிய கல்வெட்டுக்களை போன்று உள்ளதாகவும்,
அதுசமயம் அங்கு வந்திருந்த தருவைக்குளம் - வரலாற்று ஆர்வலர் செ.அந்தோணி லாரன்ஸ் என்பவரின் சில முக்கிய வரலாற்று தகவல்கள் பரிமாற்றங்களின்படி தருவைக்குளத்தின் வாகன எரிபொருள் நிறப்பு நிலயத்தின் எதிரேயுள்ள பாலகிருஷ்ணன் என்பவரது உப்பளத்தில் பாதுகாக்கப்பட்டு வழிபர்டு செய்யப்பட்டு கொண்டிருக்கும் ஓர் சதிக்கல்(நினைவுக்கல்) ஒன்றை கண்டறிந்ததாகவும்,
அதில் ஓர்புறம் வலது கையில் கீழ்நோக்கிய வாளுடன் அரசன் மற்றும் ஓர் அரசியும், மறுபுறம் சமண ஃ பௌத்த துறவி போன்ற சிற்பமும் காணப்படுவதாகவும், இந்த கல்லும் தொன்மையான மணல் கலவை சிற்பம் போன்றுள்ளது என்றும், இது 2 – 7ம் நூற்றாண்டு காலகட்டத்தினை சார்ந்ததாக இருக்கலாம் என்றும் தனது வரலாற்று புரிதல்களை பதிவு செய்தார்.
இவைகளை தான் உடனடியாக வருவாய்துறை – கிராம நிர்வாக அதிகாரிகள் வாயிலாக வட்டாட்சியரிடம் ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இந்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்களை பரிமாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பகுதி மக்கள் இதேபோன்று ஏதேனும் எழுத்துள்ள கற்களோ! சிற்பங்களே!! காணப்பட்டால் அச்சம் தவிர்த்து தங்களுடைய கிராம நிர்வாகம் வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்து நமது கீழபட்டினம் - பாண்டியர்களின் இருண்டகாலங்கள் குறித்த உண்மைகள் வெளிவரவும், நமது தமிழர்களின் கலாச்சார தொன்மைகளை உலகறிய செய்திட உதவிடவேண்டியும், நமது மத்திய -மாநில தொல்லியல் துறையினர் விரைந்து செயல்பட்டு உதவிடவேண்டியும் கோரிக்கைகளை பொதுமக்களின் சார்பாக பதிவு செய்தார்.
மக்கள் கருத்து
ஜெயக்குமார்Nov 4, 2024 - 10:14:38 PM | Posted IP 172.7*****
மேற்கண்ட தொல்லியல் ஆய்வாளர்களின் தொடர்பு எண் கிடைக்குமா
ஜெயக்குமார்Nov 4, 2024 - 10:13:15 PM | Posted IP 162.1*****
மேற்கண்ட தொல்லியல் ஆய்வாளர்களின் தொடர்பு எண் கிடைக்குமா?
illangumaranNov 4, 2024 - 06:13:07 PM | Posted IP 162.1*****
நன்றி. அருமையான தகவல்.
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











P.RAJESH SELVARATHY-THOOTHUKUDI-HISTORY AND ARCHAEOLOGICAL ENTHUSIASTNov 5, 2024 - 12:35:14 PM | Posted IP 162.1*****