» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகுகள் ஸ்ட்ரைக்!

திங்கள் 19, ஆகஸ்ட் 2024 12:59:43 PM (IST)

தூத்துக்குடியில்  ஐஸ்கட்டி விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை வழங்கும் நிறுவனத்தினர் மின்கட்டண உயர்வு காரணமாக, ஐஸ் கட்டிகளுக்கு விலையேற்றம் செய்தனராம்.

இதனால், ஐஸ்கட்டி பார் ஒன்றுக்கு ரூ.10 விலை உயர்வு செய்யப்பட்டதாம். இந்த விலை உயர்வைக் கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.


மக்கள் கருத்து

Orginal thoothukudi meenavanAug 19, 2024 - 06:54:18 PM | Posted IP 162.1*****

Aadi mudincitu la so meen rate eathurathuku ipadi strike panni rate eathitangalae

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory