» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி

செவ்வாய் 2, ஜூலை 2024 12:53:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்களை ஏவி வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஊர், புவி வட்டப் பாதைக்கு மிக அருகிலும், ராக்கெட் ஏவுதளம் இயங்க தட்பவெப்ப சூழல் சாதகமாகவும் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சேவை மையம், ராக்கெட் ஏவுதளம், ஏவுதள அடித்தளக் கட்டமைப்பு போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம்  சுமார் ரூ.20 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்த 22 நாட்களில் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory