» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் மாா்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா

புதன் 12, ஜூன் 2024 11:16:40 AM (IST)தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி நடுநிலைப் பள்ளியில் மாா்ஷல் நேசமணியின் 130வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கன்னியாகுமாி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இனைக்க போராடி வெற்றி கண்ட குமாி தந்தை என்றழைக்கப்படும் மாா்ஷல் நேசமணியின் 130வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிாியா் வின்சென்ட் தலைமையில்  நடைபெற்றது. 

விழாவில் ஒன்றிய கவுன்சிலா் இரா.அந்தோணி தனுஸ் பாலன், சமூகஆா்வலா் தொம்மை அந்தோணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் மாணவ மாணவியா்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை காமராஜா் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory