» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு: 5பேர் கைது!
புதன் 12, ஜூன் 2024 10:50:52 AM (IST)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு செய்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக 5பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முனியசாமி (65). இவரது மனைவி வேலம்மாள் (49). இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துகுமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.
முத்துகுமார் மகன் மாடசாமி (26), அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் தங்கமுருகன் (27), குருநாதன் மகன் குமார் (28), புஷ்பராஜ் மகன் முத்துகுமார் (20), அந்தோனி மகன் ராஜா என்ற முனியசாமி ஆகிய 5பேரும் முனியசாமி வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி முனியசாமியை தாக்கினார்களாம்.
இதில் காயம் அடைந்த முனியசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி வேலம்மாள் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து 5பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
