» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மரணம்!

புதன் 12, ஜூன் 2024 10:45:01 AM (IST)

பழையகாயல் அருகே பேருந்தில் பயணம் செய்த முதியவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை அரசு பேருந்து புறப்பட்டது. இதில் திருச்செந்தூருக்கு டிக்கெட் எடுத்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் பயணம் செய்துள்ளார். பஸ் பழையகாயல் அருகே சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பேருந்தை நிறுத்தி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory