» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவரை தாக்கியதாக வாலிபர் கைது
புதன் 12, ஜூன் 2024 7:57:03 AM (IST)
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் ஹமீது ஹீமைத் (21). சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ படித்துவருகிறாா். இந்நிலையில், ஊருக்கு வந்த அவா் தனது உறவினா்களுடன் காயல்பட்டினம் பஜாருக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரது மாமா புஹாரியிடம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஷேக் மைதீன் மகன் அப்துல் ரஹீம் (20) தகராறு செய்தாராம்.
பின்னா், ஹமீது ஹீமைத் தனது உறவினா்களுடன் சென்றுவிட்டாா். இரவில் தனது வீட்டு முன் நின்றிருந்த ஹமீது ஹீமைத்தை அப்துல் ரஹீம் அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதில் அவா் காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப் பதிந்தாா்; அப்துல் ரஹீமை உதவி ஆய்வாளா் சுகுமாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










