» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, ஜூன் 2024 7:12:13 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 11.05.2024 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்த சுப்பிரமணியன் (26) மற்றும் வடக்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன் (34) ஆகிய இருவரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 12.05.2024 அன்று புதுக்கோட்டை சிறுப்பாடு ஜங்ஷன் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (எ) பாலா (24) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான 3பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 3பேர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)
