» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக கால்நடை மருத்துவர்கள் தினம்: இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்!

சனி 27, ஏப்ரல் 2024 11:21:22 AM (IST)



கோவில்பட்டியில் உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு கால்நடை மருத்துவமனை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு முக்கியமானதாகும். கால்நடை மருத்துவர்களை கெளரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வின் தலைமை வகித்தார். வனத்துறை அலுவலர்கள் பிரசன்னா, பாலகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சஞ்சீவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர்கள் கண்ணபிரான்,ராகுல் கிருஷ்ணாகாந்த், நந்தகுமார், சதீஷ்குமார், அபிநாஷ் உள்பட பயிற்சி மருத்துவ மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறும் நோய் தடுப்பூசி போடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory