» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊழல் செய்து பல கோடி சம்பாதித்த அதிகாரி மீது நடவடிக்கை கோரி பரபரப்பு போஸ்டர்!!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 7:52:13 PM (IST)



ஊழல் செய்து பல கோடி சம்பாதித்த துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக விடுதலைக்களம் சார்பில் ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் தமிழர் விடுதலைக் களம் சார்பில் ச. தங்க துரை பாண்டியன் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டியிருந்தார். இந்த போஸ்டரில் போலி படடா வழங்கி உழல் செய்து பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்த உழல் அதிகாரி ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை வட்டாட்சியர் சுடலை வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடு. உழல் செய்து வாங்கிய பினாமி பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தங்கதுரை பாண்டியனிடம் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது. "ஸ்ரீவைகுண்டம் தாலூகா பத்மநாப மங்கலம் செவன்குளம் சன்னதி தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகன் ராமச்செல்வன். இவரது தாத்தா சண்முகம் அவர்களுக்கு சொந்தமான சொத்து பத்பநாப மங்களம் பகுதியில் இருந்துள்ளது. இந்த சொத்தை பணம் வாங்கி கொண்டு ஆறுமுகம் மகன் ராமர் என்ற பெயரில் கூட்டுப்பட்டா சேர்த்துள்ளார் மண்டல துணை வட்டாட்சியர் சுடலை வீரபாண்டியன். 

இதில் ஆறுமுகம் என்பவர் ராமச்செல்வனின் தந்தை பரமசிவனின் சகோதரரே. எனவே வாரிசு தாரர்கள் நாங்கள் இருக்கும் போது எப்படி ஒருவரை மட்டும் வாரிசுதாராக சொத்தை பட்டா மாற்றினீர்கள் என்று சுடலை வீரபாண்டியனிடம் நேரில் சென்று கேட்ட போது பணம் கொடுத்தால் உங்களுக்கும் பட்டா மாற்றி தருகிறேன் என்று கூறியுள்ளார். 

இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராமச்செல்வன் இவர் குறித்து தமிழக முதலமைச்சர் உள்பட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். உடனே சுடலை வீரபாண்டியன் ராமர் என்ற பெயரில் அவர் போட்டு கொடுத்த பட்டாவை ரத்து செய்துள்ளார். துணை தாசில்தார் போட்ட பட்டாவை சப் கலெக்டர்தான் ரத்து செய்ய முடியும். ஆனால் இவர் எப்படி அவசர அவசரமாக ரத்து செய்ய முடியும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. 

மேலும் பல பாமர மக்கள் இவரிடம் காசு கொடுக்காமல் பட்டா கேட்டால், அவர்களை சப் கலெக்டர் அலுவலகத்தில் போய் திருத்தி கொள்ளுங்கள் என அனுப்பி அலைய வைத்து விடுவார். சமீபத்தில் வல்லகுளம் விவசாயி தங்க பெருமாள் அவர்கள் குடும்ப சொத்தை கூட்டுப்பட்டா வாங்க முயற்சித்த போது அவரை சப்கலெக்டர் தான் கொடுப்பார் என தூத்துக்குடிக்கு அலைய வைத்துவிட்டார். இது பற்றி கேள்விபட்ட முன்னாள் சப் கலெக்டர் கௌரவ் குமார் நியாயமான சொத்து வாரிசான தங்கபெருமாள் மற்றும் அவரது தம்பி கணேசனுக்கு பட்டா வழங்க நேரடி உத்தரவிட்டுள்ளார். இதே போல் பல விவசாயிகளை பணம் கேட்டு படாத பாடு படுத்தியுள்ளார்.

எந்த பட்டா கேட்டு மனு செய்தாலும், அந்தமனு காலம் முடியும் வரை அதை பற்றி விசாரிக்காமல் வைத்து விட்டு பணம் தந்தவர்களுக்கு மட்டுமே பட்டா கொடுப்பார் . பணம் தராதவர்களை கடைசி நாள் நிராகரித்து விடுவார். இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் பலர் இவர் மீது புகார் கொடுக்க தயாரான நிலையில் உள்ளனர். இதனால் இவர் இதுவரை பணியாற்றிய காலத்தில் எந்தந்த பட்டாவெல்லாம் நிராகரித்தார். எதற்காக நிராகரித்தார் என அந்தந்த நபர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் விசாரித்து பட்டா வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அவர் எந்தெந்த பட்டா வழங்கினாரோ அதையும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். 

இவர் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது யாரும் என்னை அசைக்க முடியாது என்று ஆளும் கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் நடந்துள்ளார். எனவே ஆளும் கட்சியினர் இவர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் இவர் சொல்லும் சொல் உண்மையாகி விடும். எனவே தவறு செய்ய அவருக்கு முறைப்படி தண்டனை பெற்று தரவேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த வருடம் மழை வெள்ளத்தில் சிறப்பாக பணி செய்த வகைக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார் தமிழக முதலமைச்சரிடம் அண்ணா விருது பெற்றுள்ளார். இதனால் ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்திற்கே பெருமை கிடைத்துள்ளது. இந்த வேளையில் இதுபோன்ற துணை தாசில்தார்கள் அரசு பெயரை கெடுக்கும் வண்ணம் இதே தாலூகா அலுவலகத்தில் பணி புரிந்தார் என்ற கருப்பு புள்ளியை அகற்ற தாசில்தாரே இவர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் தாலூகா மக்களின் கோரிக்கை. 


மக்கள் கருத்து

m.sundaramApr 26, 2024 - 08:37:34 PM | Posted IP 172.7*****

Allegations area seems to be correct. It is everywhere in TN. No departmental action s taken against the erring govt officials. Therefore such crimes are continuously carry forward without any fear.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory