» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித மதர் தெரசா கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!

திங்கள் 4, டிசம்பர் 2023 3:05:25 PM (IST)



விவசாயத்தில் நவீன கருவிகளின் பயன்பாடு குறித்து தூத்துக்குடி புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.

புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நேரடியாக கிராமங்களுக்கு அழைத்து சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிராமப்புற மேம்பாட்டுக்கான அம்சங்கள், விவசாயத்தில் நவீன கருவிகளின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி தாலுகா தளவாய்புரம் கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

அங்கு விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று ட்ரோன் கருவி மூலமாக விவசாய பயிர்களுக்கு விதைப்பது, பயிர்களை காப்பாற்ற பூச்சி மருந்து தெளிப்பது போன்ற செய்முறைகளை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். இந்த ட்ரோன் கருவி மூலம் பயிர்களின் வளர்ச்சியை கண்காணிப்பது குறித்தும் செய்து காட்டினார். இதனை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். 

இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் வளாக மேலாளர் விக்னேஷ், மின் மற்றும் மின்னனுவியல் துறை தலைவர் எபனேசர் ஆகியோர் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory