» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மில்லர்புரம் தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன பண்டிகை: திரளான பொதுமக்கள் பங்கேற்பு!

வெள்ளி 29, மே 2026 9:45:16 PM (IST)



தூத்துக்குடி மில்லர்புரம் சேகரம் தூய பவுலின் ஆலயத்தின் 59-ஆவது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

சிஎஸ்ஐ தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கு மில்லர்புரம் சேகரம் தூய பவுலின் ஆலயத்தின் 59-ஆவது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழாவையொட்டி, ஆலயத்தில் ஆராதனை மற்றும் நற்செய்தி பெருவிழா வழிபாடுகள் நடைபெற்றன. இதில் சபை மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஜெபித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 'அசன விருந்து' நடைபெற்றது. இதற்காகப் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இந்த அசன விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, உணவருந்திச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மில்லர்புரம் சபை ஊழியர்கள், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory