» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு திட்டங்களை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்

வெள்ளி 1, டிசம்பர் 2023 4:10:58 PM (IST)



அரசு திட்டங்களை பெற்று மீனவர்கள் பயன்பெற வேண்டும் என்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மீனவர்கள் உங்கள் பகுதியில் உள்ள தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும், அரசின் திட்டங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு பயன்பெறவும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அரசு திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாகும். 

இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம். மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மட்டுமல்லாமல் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு அரசு திட்டங்கள் உள்ளன. அவற்றை பெற்று நீங்கள் பயன்பெற வேண்டும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அனைவரும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர்கள் புஷ்ரா (தூத்துக்குடி), விஜயராகவன் (மீன்பிடி துறைமுகம்) மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory