» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா: டிச.02 ஆம்தேதி நடக்கிறது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:43:28 PM (IST)
நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா டிச.02 ஆம் தேதி (இன்று) சனிக்கிழமை இரவு நடக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி விட்டாலே நாச ரேத் கோலாகலம் பூண்டு விடும்.கிறிஸ்துமஸ் பண் டிகை முன்னோட்டமாக டிச.02 ஆம் தேதி (இன்று) சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நாசரே தூய யோவான் பேராலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசை பெருவிழா 2023 காமா ஊழியம் சார்பில் நடத்தப்படுகிறது. இன்னி சைப் பாடல்களை ரட்சகா இசைக்குழுவினர் நடத்து கின்றனர்.பிரின்ஸ்,ராஜி, ப்ரைஸ்லின், ஸ்பெல்மன் போன்ற புகழ் மிக்க பாடகர் கள் இன்னிசைப்பெருவிழா வில் பங்கு பெறுகின்றனர்.
கிறிஸ்துமஸ் இன்னிசை பெருவிழாவிற்கு கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப் தலைமை தாங்குகிறார். நாசரேத் தூயயோவான் பேராலய திருப்பணிவிடை யாளர்கள் பொன் செல்வின் அசோக்குமார், ஹென்றி ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலைவகிக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழாவில் பாரம்பரிய மிக்க கிறித்தவ பாடல்கள், பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் மிகச் சிறந்த பரிசுகள், இன்னிசை பெருவிழாவில் ஏழை,எளிய மக்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை காமா சார்பில் தலைவர் பில்லிகிரஹாம், செயலர் ஜெபின், பொருளாளர் மேஷாக், பாடகர் குழுத் தலைவர் ஜோயல், உப தலைவர் மர்காஷிஸ், இணைச்செயலர் லவ்சன், செயற்குழுசெயலர் செல் வின், இணை ஒருங்கிணை ப்பாளர்கள் குரூஸ் மாசில் லாமணி,ஜெஸ்வின் பிரான்சிஸ், கன்வீனர்கள் விமல்சுதாகர், ஜாண்சன், ஸ்தாபகர் பி.ஆர்.சாமுவேல் ஆகியோர் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










