» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 10:22:17 AM (IST)
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கருப்பட்டி ஆபீஸ் சொசைட்டி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (28) என்பதும் அவர் அந்த பகுதியில் செல்போரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிம்சனை கைது செய்தனர். பிரபல ரவுடியான சிம்சன் மீது 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.