» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா வட்டக் கிளை மாநாடு
வியாழன் 30, நவம்பர் 2023 9:58:12 AM (IST)

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா வட்டக் கிளை மாநாடு கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். வைரவிழா மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் சுவாமிநாதன் உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஞானராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் உமாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாடு நிறைவுரையை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தூர் ராஜன் உரையாற்றினார்.மேற்கண்ட மாநாட்டில் வைத்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜ்குமார் மாநாட்டு ரீதியாக ரூபாய் 5000 வழங்கினார். அதன் பின்னர் கோவில்பட்டி வட்டத்தின் மண்டல துணை வட்டாட்சியர் செந்தில் முருகன் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக வட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், வட்டக்கிளை தலைவராக செந்தில்குமார், வட்ட செயலாளராக அருண்குமார், பொருளாளராக ராஜசேகர்,வட்டத்துணை தலைவராக சங்கரன், வட்ட இணை செயலாளராக ஜெயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக முத்து கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








