» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!

புதன் 29, நவம்பர் 2023 11:52:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஓன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில். "ஒன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ்  தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக கோவில்பட்டியில் ஒன் ஸ்டாப் சென்டர் ஒருங்கிணைந்த சேவை மையம் (Additional One Stop Centre) செயல்படவுள்ளது. 

அதில் சுழற்சி முறையில் பணிபுரிய பல்வேறு பணியிடஙகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி:ஒரு மையநிர்வாகி - சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் (MSW),

ஒரு மூத்த ஆலோசகர் - சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் (MSW) அல்லது உளவியல், சமூகவியலில் முதுநிலைப் பட்டம்.

ஆறு வழக்குப் பணியாளர்கள் - சமூகப்பணி அல்லது உளவியல் அல்லது சமூகவியலில் இளநிலைப் பட்டம்

ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் - கணினி அறிவியலில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம்.

இரண்டு பாதுகாவலர்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி

இரண்டு பல்நோக்கு உதவியாளர்கள் - 8ம் வகுப்பு தேர்ச்சி

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 15.12.2023 மாலை 5 மணிக்குள் கீழ்காணும் மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரபள்ளம், தூத்துக்குடி - 628101, தொலைபேசி எண்: 04612325606   தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory