» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

புதன் 29, நவம்பர் 2023 10:34:50 AM (IST)



தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்காம் கேட் வரை செல்லும் பாதையில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும் எட்டையாபுரம் ரோட்டில் மழைநீர் வடிகாலுக்குள் செல்வதற்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். 

பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுனங்கள் மற்றும் வீடுகளுக்கு முன்பாக சாலையை விட உயரமாக மணல் மற்றும் கற்களை போக்குவரத்திற்கும் வடிகாலுக்குள் நீர் செல்வதற்கு தடையாகவும் இது போன்று உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


மக்கள் கருத்து

S.நாராயணன்Nov 30, 2023 - 07:48:47 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி1ம் கேட்டில் சுரங்கப்பாதை. சரிப்படாது.மழை பெய்தால் உதவாது.நீர் தேங்கும் மாற்றுவழி.SAV Highschool கீழ்புற சாலையையும் தெற்கே சிவன் கோவில் சாலையையும் சிறிய 15அடி அகல மேம்பாலம் போட்டு இணைக்கலாம்.கேட் அடுத்தபோது இதை மாறறுப்பாதையாக பயன்படுத்தலாம் கேட் அடைக்கும்போது அதை தெரிவிக்க சத்திரம் சாலையில் காந்தி சிலை அருகிலும் 2ம் கேட் அருகிலும் சிக்னல் விளக்கு வைக்கலாம். இதுபோல வடக்கு ராஜா தெரு தெற்கு ராஜா தெரு இவற்றை சிறிய மேம்பாலம் போட்டும் இணைக்கலாம்.இது மட்டக்களப்புப் வாகனங்களுக்கு பெரிதும் உதவும் இவைகள் தேவையில்லாமல் 1ம் கேட் போகவேண்டியதில்லை.

RajtutNov 29, 2023 - 12:57:28 PM | Posted IP 162.1*****

சாலை வசதி இல்லாமல் நிறைய வார்டுகள் உள்ளன இப்படி போட்ட சாலையவே திரும்ப திரும்ப போடுவதால் என்ன பயன் ..புறநகர் பகுதிகளிலி சாலை வசதி ரொம்ப மோசம் குறிப்பாக முதல் வார்டு சங்கரப்பேரி பகுதியில் மழை பெய்தால் போகமுடியாத சூழ்நிலைதான்

தமிழன்Nov 29, 2023 - 10:49:10 AM | Posted IP 172.7*****

அப்படியே நாலாவது கேட் வரை உள்ள சாலை மற்றும் கருத்தபாலத்தில் இருந்து இரண்டாவது கேட் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது அந்த சாலையை விரைவில் சரி செய்யவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory