» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கோரிக்கை!
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:57:37 AM (IST)

தூத்துக்குடியில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது..
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனவரி 07, 2024 அன்று மதுரையில் நடைபெறவிருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டினை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவா் முஹம்மது உமர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்தினாா்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மீனவர் அணி துணை ஒருங்கினைப்பாளர் கெளது மைதீன், SDTU மாவட்ட தலைவா் குலசை தாஹிா் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் மின்னல் அம்ஜத், செயற்குழு உறுப்பினர்கள் மைதீன்கனி, ஷேக் முகைதீன், நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக மாவட்ட துணை தலைவர் அஷ்ரப் அலி பைஜி நன்றியுரை வழங்கினாா். கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் மதுரையில் நடைபெற இருக்கும் எஸ்டிபிஐ கட்சி வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அதன் விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாலைகளில் அதிகமான மாடுகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது அதனை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் விஷக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது எனவே மாவட்ட நிர்வாகம் காய்ச்சல் பரவுவதை தடுக்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தை கண்டித்து 31 ஆண்டுகால அநீதி என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரில் வைத்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










