» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது
செவ்வாய் 28, நவம்பர் 2023 7:58:43 AM (IST)
கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி முருகம்மாள் (40). கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். இவரது வீட்டருகே குடியிருக்கும் பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டியின் மாடு முருகம்மாள் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்ததாம்.
இதையடுத்து, மாட்டை கட்டிப்போடும்படி முத்துப்பாண்டியின் தாயிடம், முருகம்மாள் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, முருகம்மாள் வீட்டைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் முத்துப்பாண்டி (32), அவரது தாயாா் பொற்கொடி (58) ஆகியோா் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










