» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணி இடங்கள்: டிச.5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

திங்கள் 27, நவம்பர் 2023 5:17:59 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM திட்டத்தின் கீழ் (DEIC) ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு (தொகுப்பூதியம்) ஆண் / பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி தகுதி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களுடன் சுய முகவரியிட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கவர் 1 மற்றும் கடவுசீட்டு அளவிலான புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

(எந்த பணியிடத்திற்கு என்ற பணியின் பெயரை தபால் உறையின் மேல் குறிப்பிடப்பட வேண்டும்) காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தொகுப்பூதியம் மற்றும் கல்வித்தகுதி பின்வருமாறு:

1. PHYSIOTHERAPIST: காலிப்பணியிடம் 1 தொகுப்பூதியம் 13000 Passed in Bachelor of Physiotherapy / degree certificate from any recognized University

2 SPECIAL EDUCATOR: காலிப்பணியிடம் 1 தொகுப்பூதியம் 17000 Passed in B.Ed in Special Education in the field of Mental Retardation / Diploma in Early Childhood Special Education (Mental Retardation) / B.Ed Special Education (Locomotor and Neurological Disorder) P.G. Diploma in Special Education (Mult. Dis. Physical and Neuro) recognized by Rehabilition Council of India

குறிப்பு: மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அப்பணியிடங்கள் எக்காரணம்கொண்டும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2023

நிர்ணயிக்கப்பட்ட 05.12.2023-க்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory