» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்ற கூட்டம்
திங்கள் 27, நவம்பர் 2023 9:47:07 AM (IST)

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 73வது மாதக்கூட்டம் என்.கே.மஹாலில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளி இடைநிலைப் ஆசிரியை நிர்மலா தலைமை வகித்தார்.பணிநிறைவு பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மன்றக் காப்பாளர் துரைராஜ் வரவேற்றார்.வாசிப்பாளரை ஊக்கப்படுத்தும் விதமாக வாசிப்பதை நேசிப்பவர் விருது ஆசிரியை கவிதா, லட்சுமி சீனிவாசா பள்ளி தமிழாசிரியை ராதா ஆகியோர்க்கு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. பேச்சாளர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் எனும் தலைப்பில் மகிழ்வுரையாற்றினார்.
கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ், மன்றக் காப்பாளர்கள் மோகன்ராஜ், செல்வின், மன்ற ஆலோசகர் ஹரிகிருஷ்ணன், கோவில்பட்டிக் கம்பன் கழக துணைத் தலைவர் ராஜாமணி, துணைச் செயலாளர் மதிவாணன், உரத்த சிந்தனை வாசகர்வட்ட தலைவர் சிவானந்தம், கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன், ஆசிரியர்கள் அருள்காந்தராஜ், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்றக் காப்பாளர் சேர்மத்துரை நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










