» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : திரளான பக்தர்கள் வழிபாடு
திங்கள் 27, நவம்பர் 2023 8:15:44 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவில், வீடுகள்தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக் கார்த்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளால் அலங்கரித்தனர். கொழுக்கட்டை, புட்டு போன்றவை செய்து சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. அதே போன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் சொக்கப்பனை எரிந்த சாம்பலை மக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
செண்பகவல்லி அம்மன் கோவில்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் கோவில் வளாகம் முழுவதும் திருவிளக்குகள் ஏற்றப்பட்டன. இரவு 7 மணிக்கு மேல் கோவில் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கவுரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணிய சுவாமிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து காட்சி அருளினர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










