» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஞாயிறு 26, நவம்பர் 2023 6:13:12 PM (IST)


தூத்துக்குடி  வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி  வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் 2018-2020, 2019-2021 மற்றும் 2020-2022ஆம் கல்வியாண்டுகளில் இளங்கல்வியியல், முதுநிலை கல்வியியல், ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 26.11.2023 அன்று பட்டமளிப்பு விழா நடத்தி அவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.  

பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் .த.கனகராஜ் வரவேற்புரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக பாரதிதாரசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ப.மணிசங்கர் கலந்து கொண்டு 430 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  

அவர் தனது உரையில் ஆசிரியப்பணியின் சிறப்பு குறித்தும், கல்வியியல் துறை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் மாணவர் நல்லுறவு குறித்தும், இந்தியர் என்பதில் ஒற்றுமையுணர்வோடு வாழ்வதன் அவசியம் குறித்தும் பாரதியை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் தன் கருத்தினை பகிர்ந்தார். 

இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரித் தலைவர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம், கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம்,  வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு பங்கேற்றுச் சிறப்பித்தனர். கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில்  திறம்பட செய்தார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory