» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதர் பொறியியல் கல்லூரிக்கு அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து! மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியது!
வெள்ளி 17, நவம்பர் 2023 5:45:59 PM (IST)
தூத்துக்குடி வாகைக்குளம், மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்தான 4 ஸ்டார் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது.
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஸ்டார்ட்- அப் போட்டி, தேசிய அளவிலான போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்ட, தமிழகத்தின் தென்மண்டல அளவிலான பல்வேறு கல்லூரிகளின் பட்டியலில் மதர் தெரசா பொறியியல் சிறப்பிடம் பெற்று அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்தான 4 ஸ்டார் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது.
மதர் தெரசா பொறியியல் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் S.கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மில்லர்புரம் தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன பண்டிகை: திரளான பொதுமக்கள் பங்கேற்பு!
வெள்ளி 29, மே 2026 9:45:16 PM (IST)

தூத்துக்குடியில் எபோலா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : ஆட்சியர் விஷு மகாஜன் ஆலோசனை!
வெள்ளி 29, மே 2026 9:04:43 PM (IST)

உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் : ஆட்சியர் விஷுமகாஜன் தகவல்!
வெள்ளி 29, மே 2026 5:30:53 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை அமோனியா ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து!
வெள்ளி 29, மே 2026 4:42:45 PM (IST)

அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! – 2 ஊழியர்கள் அதிரடி நீக்கம்!
வெள்ளி 29, மே 2026 3:24:38 PM (IST)

உடம்பில் மஞ்சள், சகதி பூசி நேர்த்திக்கடன்: கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு!
வெள்ளி 29, மே 2026 3:12:32 PM (IST)










