» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காந்திய விருது வழங்கும் விழா

செவ்வாய் 3, அக்டோபர் 2023 7:54:46 AM (IST)



தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நலம் மன்றம், காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்கம், சேவா கல்வி அறக்கட்டளை இணைந்து காந்தி ஜெயந்தி விழாவை நடத்தியது. ஆசிரியை மாரியம்மாள் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் தலைவர் மைதிலி அவர்கள் தலைமை தாங்கினார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார். 

காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர்  இயக்க மாவட்ட தலைவர் சு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஜே இ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் அவர்களின் நேர்மையைப் பாராட்டி அவர்களுக்கு காந்திய விருது வழங்கப்பட்டது. தொழிலதிபர் செல்வராஜ், வழக்குரைஞர் விஜய சுந்தர் மற்றும் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் அவர்களுக்கும் அவர்களுடைய சேவையை பாராட்டி காந்திய விருது வழங்கப்பட்டது. புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது. 

காந்தி குறித்து பேசிய குழந்தைகளுக்கு பத்மலதா பரிசு வழங்கினார். காந்தி குறித்து கவிதை எழுதி வாசித்தவர்களுக்கு சர்வேயர் குருசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியை தேவி நன்றி கூறினார்.    விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம், காந்திய வழியில் ஊருக்கு 10 பேர் இயக்கம், சேவா கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தது. விழாவில் குடியிருப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory