» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விறகு கட்டையால் தாக்கி ஜவுளி வியாபாரி கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:35:39 AM (IST)
தூத்துக்குடி அருகே ஜவுளி வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் லட்சுமனன் மகன் அழகர் (38). இவர் ரெடிமேட் ஆடைகள் விற்பனை தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (43). இவர் புதியம்புத்தூரில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் காமராஜ் நகரில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றனர்.
அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அவர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு முருகேசன் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே முருகேசன் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










