» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொறியியல் கல்லூரியில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா!
சனி 26, ஆகஸ்ட் 2023 5:59:30 PM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அன்னை தெரசா மனிதநேயத்துடன் அன்பால் அனைவரையும் அரவணைத்தவர். வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நம்பிக்கையின் ஒளி விளக்காக திகழ்ந்தவர். அவர் ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர். அவரது 114வது பிறந்த நாள் ஆகஸ்ட் 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வாகைகுளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு கல்லூரி இயக்குனர் முனைவர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் முனைவர் ஞானச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர், இயந்திரவியல் துரை பேராசிரியர் மெக்லூரெட் அன்னை தெரசாவின் பெருமையை கூறுகையில், "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பதற்கேற்ப அன்பால் இந்த உலகை வசப்படுத்திய பெண்மணி வேறு யாருமல்ல "புனிதர் அன்னை தெரசா "மதர் தெரசா அவர்களின் தியாகத்தை, மனித நேய சேவையை பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் முனைவர் விக்னேஷ் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மில்லர்புரம் தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன பண்டிகை: திரளான பொதுமக்கள் பங்கேற்பு!
வெள்ளி 29, மே 2026 9:45:16 PM (IST)

தூத்துக்குடியில் எபோலா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : ஆட்சியர் விஷு மகாஜன் ஆலோசனை!
வெள்ளி 29, மே 2026 9:04:43 PM (IST)

உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் : ஆட்சியர் விஷுமகாஜன் தகவல்!
வெள்ளி 29, மே 2026 5:30:53 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை அமோனியா ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து!
வெள்ளி 29, மே 2026 4:42:45 PM (IST)

அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! – 2 ஊழியர்கள் அதிரடி நீக்கம்!
வெள்ளி 29, மே 2026 3:24:38 PM (IST)

உடம்பில் மஞ்சள், சகதி பூசி நேர்த்திக்கடன்: கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு!
வெள்ளி 29, மே 2026 3:12:32 PM (IST)










