» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது!

செவ்வாய் 8, ஆகஸ்ட் 2023 5:29:30 PM (IST)

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயிலை வேகப்படுத்தும் வகையில் வருகிற 15ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.  செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலானது சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே வண்டி எண். 16105 எனவும்  திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே வண்டி எண் 16106 எனவும்  தினந்தோறும் இயங்கி வருகிறது. 

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலின் வேகம் அதிகரிப்பட்டு செந்தூர் சூப்பர் பாஸ்ட் இரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த இரயில் வண்டி எண் 20605 ஆனது சென்னை எழும்பூர்-இரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச் செந்தூர் இரயில் நிலையத் தை வந்தடைகிறது. 

மறுமார்க்கத்தில் வண்டி எண் 20606 இரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 10:25 மணிக்கு சென்றடையும் என தென்னக இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. 



மக்கள் கருத்து

ராமநாதபூபதிAug 28, 2024 - 05:05:58 PM | Posted IP 172.7*****

திருச்செந்தூர் ல சென்னை போறதுக்கு 14 மணி நேரம். இதுக்கு பேரு சூப்பர் பாஸ்ட் ரெயில்

CHIDHAMBARAM KARTHIAug 26, 2024 - 04:47:42 PM | Posted IP 162.1*****

A/c not well,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory